பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை

தற்போது நிலவும் சீரற்ற வானிலை மற்றும் வெள்ளப்பெருக்கு காரணமாக பல பகுதிகளில் மின்சார விநியோகத்தை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
காலி, களுத்துறை, இரத்தினபுரி, கொழும்பு மற்றும் கேகாலை மாவட்டங்களில் மின்சாரத்தை துண்டிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.
வெள்ள நிலைமை காரணமாக மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் அப்பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.