T20 உலக கோப்பை கிரிக்கெட்: பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது மேற்கு இந்திய தீவுகள் அணி!

ஐசிசி t20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரில் இரண்டாவது லீக் ஆட்டத்தில் மேற்கிந்தியத் தீவுகள் அணியும் பப்பூவா நியூ கயானா அணியும் பல பரிட்சை நடத்தியது. கயானாவில் நடைபெற்ற இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பந்து வீசுவதாக அறிவித்தது.

இதன் அடுத்து களமிறங்கிய பி என் ஜி அணியில் தொடக்க வீரர் டோனி உரா இரண்டு ரன்னிலும், சியாக்கா 1 ரன்னிலும், ஹிரி ஹிரி இரண்டு ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர். எனினும் கேப்டன் ஆசாத் வாலா பொறுப்புடன் விளையாடி 21 ரன்கள் சேர்த்தார்.

ஒரு கட்டத்தில் பிஎன்ஜி அணி தடுமாறியபோது களத்திற்கு வந்த சசிபாவு அபாரமாக விளையாடி 43 பந்துகளில் அரை சதம் அடித்தார். இதில் ஆறு பவுண்டரிகளும், ஒரு சிக்சரும் அடங்கும்.இறுதியில் கிப்லின் 27 ரன்கள் சேர்க்க, பி என் ஜி அணி 20 ஓவர் முடிவில் எட்டு விக்கெட் இழப்பிற்கு 136 ரன்கள் எடுத்தது. இந்த இலக்கை எல்லாம் 10 ஓவர்களில் வெஸ்ட் இண்டீஸ் பெற்றுவிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.

ஆனால் அங்கு தான் ஒரு பெரிய ட்விஸ்ட் ஏற்பட்டது. ஆடுகளம் தொய்வாக இருந்ததால் பி என் ஜி பவுலர்கள் வீசிய பந்துவீச்சை எதிர்கொள்ள வெஸ்ட் இண்டீஸ் வீரர்கள் தடுமாறினர். தொடக்க வீரர் ஜான்சன் சார்லஸ் டக் அவுட்டாக, பிராண்டன் கிங் 34 ரன்களிலும், நிக்கோலஸ் பூரான் 27 ரன்களிலும் முக்கிய கட்டத்தில் ஆட்டம் இழந்தனர்.
இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 63 ரன்கள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

ஒரு கட்டத்தில் கேப்டன் ரோமன் போர்வெல் 15 ரன்களில் வெளியேற, பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட ரூதர்போர்டு 2 ரன்னில் ஆட்டம் இழந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 97 ரன்களுக்கு ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதனால் பி என் ஜி அணி வெற்றி பெறும் என எதிர்பார்க்கப்பட்டது.

இந்த சூழலில் ராஸ்டன் செஸ் மற்றும் ஆண்டிரூ ரஸில் ஜோடி அதிரடியாக விளையாடி வெஸ்ட் இண்டீஸ் அணியை கரை சேர்த்தது. கடைசி வரை ஆட்டம் இழக்காமல் நின்ற ராஸ்டன் சேஸ் 27 பந்துகளில் 42 ரன்கள் எடுத்தார்.

இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி ஒரு ஓவர் எஞ்சிய நிலையில் தான் வெற்றியை பெற்றது. பி என் ஜி வீரர்கள் கடும் நெருக்கடி கொடுத்து வெஸ்ட் இண்டீஸ் க்கு சவால் அளித்தார்கள்.

Leave A Reply

Your email address will not be published.