போர்ச்சுகல் விமான கண்காட்சியின் போது 2 விமானங்கள் மோதியதில் ஒருவர் உயிரிழப்பு (Video).

போர்ச்சுகலின் தென்பகுதியில் நடைபெற்ற விமான அணிவகுப்புக் காட்சியில் 2 சிறிய விமானங்கள் விபத்துக்குள்ளானதில் ஸ்பெயினைச் சேர்ந்த விமானி ஒருவர் மாண்டார்.

போர்ச்சுகலைச் சேர்ந்த மற்றொரு விமானிக்கு இலேசான காயம் ஏற்பட்டதாக அந்நாட்டின் ஆகாயப்படை தெரிவித்தது.

அவருக்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதாக ஆகாயப்படை கூறியது.

Beja விமான அணிவகுப்பில் 6 விமானங்கள் பங்கெடுத்தன.

விபத்து ஏற்பட்டதற்கான காரணத்தைக் கண்டுபிடிக்க விசாரணை நடத்தப்படும் என்று போர்ச்சுகலின் தற்காப்பு அமைச்சர் கூறினார்.

சனிக்கிழமை (1 ஜூன்) தொடங்கிய அந்த நிகழ்ச்சி ரத்துச் செய்யப்பட்டுள்ளது.

Leave A Reply

Your email address will not be published.