கிளவ்டியா ஷேன்பாம் மெக்சிகோவின் முதல் பெண் அதிபரானார்!

மெக்சிகோவின் முதல் பெண் அதிபராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் கிளவ்டியா ஷேன்பாம் (Claudia Sheinbaum).
அவர் குறைந்தது 58.3 விழுக்காட்டு வாக்குகளுடன் வெற்றிபெற்றார்.
மெக்சிகோ தேர்தல் ஆணையத்தின் உடனடி வாக்கு எண்ணிக்கையில் அது தெரியவந்தது.
எதிர்த்தரப்புக் கூட்டணியைச் சேர்ந்த திருவாட்டி சோச்சித்தில் கால்வேஸுக்குக் (Xóchitl Gálvez) குறைந்தது 26.6 விழுக்காட்டு வாக்குகள் கிடைத்தன.
மெக்சிகோவின் தற்போதைய அதிபர் ஆண்ட்ரெஸ் மேனுவல் லோப்பெஸ் ஓப்ரடார் (Andres Manuel Lopez Obrador) 2018ஆம் ஆண்டுத் தேர்தலில் 54.71 விழுக்காட்டு வாக்குகளைப் பெற்றார்.
இந்த ஆண்டுத் தேர்தலில் வெற்றிபெற்ற ஷேன்பாம் அவரை விட அதிகமான வாக்கு விகிதத்தைப் பெற்றுள்ளார்.
பாகுபாடின்றி நாட்டு மக்கள் அனைவரையும் கவனித்துக்கொள்வது தமது பொறுப்பு என்றார் திருவாட்டி ஷேன்பாம்.
நியாயமான, வளப்பமான மெக்சிகோவைத் தொடர்ந்து உருவாக்க ஒன்றிணைந்து செயல்படுவதன் முக்கியத்துவத்தை அவர் வலியுறுத்தினார்.