குற்றவாளி என நிரூபிக்கப்பட்ட நாடுகளின் தலைவர்கள்?

உலகின் பல நாடுகளில் தலைவர்கள் பலர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டுள்ளனர்.

அண்மையில் அமெரிக்க முன்னாள் அதிபர் டோனல்ட் டிரம்ப் மீதான வழக்குகளில் அவர் குற்றவாளி என்று தீர்ப்பளிக்கப்பட்டது.

2016இல் நடந்த அதிபர் தேர்தலில் திரு. டிரம்ப, தம்மைப் பற்றிய பாதகமான தகவல்களை மறைக்கப் பணம் தந்தது தெரியவந்தது.

மற்ற நாட்டுத் தலைவர்களும் குற்றவாளிகளாக நிரூபிக்கப்பட்ட சூழல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மலேசியா

– முன்னைய பிரதமர் நஜிப் ரஸாக்கிற்குப் (Najib Razak), பல பில்லியன் டாலர் 1MDB மோசடியில் ஊழல் செய்ததற்காக 12 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

– தண்டனை பின்னர் 6 ஆண்டுகளுக்குக் குறைக்கப்பட்டது.

தாய்லந்து

– முன்னைய பிரதமர் தக்சின் ஷினவாட் (Thaksin Shinawatra) மீது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.

– அவர் சென்ற ஆண்டு (2023) ஆகஸ்ட் மாதம் நாட்டுக்குத் திரும்பியபோது கைது செய்யப்பட்டார்.

– பிரதமராகப் பணியாற்றிய அவரது சகோதரி யிங்லக்கிற்கு (Yingluck) அரிசிச் சலுகைத் திட்டத்தைத் தவறாய்க் கையாண்டதற்காக2017இல் 5 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

மியன்மார்

– ஆங் சான் சூச்சி (Aung San Suu Kyi) 2016இலிருந்து அரசாங்க ஆலோசகராகப் பணியாற்றினார்.

– ஊழல், தேர்தல் மோசடி, அரசாங்க ரகசியச் சட்டத்தை மீறியது உள்ளிட்ட பல குற்றங்களுக்காக அவருக்கு 27 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பாகிஸ்தான்

– முன்னாள் பிரதமர் இம்ரான் கான் (Imran Khan) ஊழல் குற்றத்துக்காகவும் நாட்டின் ரகசியங்களைக் கசியவிட்டதற்காகவும் சிறையில் இருக்கிறார்.

தென்கொரியா

– முன்னாள் அதிபர் லீ மியுங்-பாக்கிற்கு (Lee Myung-bak) லஞ்சம், மோசடிக்காக 17 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

– அதிபராகப் பணியாற்றிய பார்க் கியுன்-ஹாய்க்கு (Park Geun-hye) லஞ்சம், வற்புறுத்தல் ஆகிய குற்றங்களுக்காக 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தைவான்

– முன்னாள் அதிபர் சென் ஷுய்-பியானுக்கு (Chen Shui-bian) பணமோசடி, லஞ்சம் ஆகிய குற்றங்களுக்காக 2009இல் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.

இஸ்ரேல்

– முன்னைய அதிபர் மோஷே கட்சாவுக்குப் (Moshe Katsav) பெண்களைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றத்துக்கு 7 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

– முன்னாள் பிரதமர் எஹுட் ஒல்மர்ட்டுக்கு (Ehud Olmert) மோசடிக்காக 27 மாதச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பிரான்ஸ்

– அதிபராகப் பணியாற்றிய ஷாக் ஷிராக்கிற்கு (Jacques Chirac) ஊழல் குற்றத்துக்காக ஈராண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

– அதிபராகப் பணிபுரிந்த நிக்கோலஸ் சர்க்கோஸி (Nicolas Sarkozy) ரகசியத் தகவலைப் பெற நீதிபதிக்கு லஞ்சம் அளித்த குற்றத்துக்கு மூவாண்டுச் சிறைத்தண்டனை பெற்றார்.

இத்தாலி

– முன்னாள் பிரதமர் சில்வியோ பெர்லுஸ்கோனிக்கு (Silvio Berlusconi) 30க்கும் மேற்பட்ட வழக்குகளுடன் தொடர்பு இருக்கிறது.

– இளம் பெண்ணுடன் பாலியல் உறவில் ஈடுபட்ட வழக்கில் 2013இல் அவர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

அர்ஜென்ட்டினா

-அதிபராகப் பணியாற்றிய கிறிஸ்டீனா ஃபெர்னாண்டஸ் டி கர்ச்னர் (Fernandez de Kirchner) பில்லியன் டாலர் மோசடி வழக்கில் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டார்.

– அவருக்கு 6 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

பிரேசில்

– முன்னைய அதிபர் லுயீ இனாசியோ லூலா டா சில்வா (Luiz Inacio Lula da Silva) 2018இல் ஊழல் குற்றத்துக்காகச் சிறையில் இருந்தார்.

குரோஷியா

– ஊழல், போரிலிருந்து லாபம் பெற்ற குற்றத்துக்காகப் பிரதமராக இருந்த ஐவோ சனாண்டர் (Ivo Sanader) 2011 முதல் சிறையில் இருக்கிறார்.

எகிப்து

– 2015இல் முன்னாள் சர்வாதிகாரி ஹொஸ்னி முபாரக்கிற்கும் (Hosni Mubarak) அவரது 2 மகன்களுக்கும் நாட்டின் பணத்தை மோசடி செய்த குற்றத்துக்காக மூவாண்டுச் சிறை விதிக்கப்பட்டது.

பெரு

– முன்னாள் அதிபர் அல்பெர்ட்டோ ஃபுஜிமொரி (Alberto Fujimori) மனித உரிமையை மீறியது, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தியது உள்ளிட்ட குற்றங்களுக்கு 15 ஆண்டுகள் சிறையில் இருந்தார்.

தென்னாப்பிரிக்கா

– முன்னைய அதிபர் ஜேக்கப் ஸூமாவுக்கு (Jacob Zuma) நீதிமன்றத்தை அவமதித்த குற்றத்துக்காக 2021இல் 15 ஆண்டுச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

சுடான்

– 2019இல் முன்னாள் அதிபர் ஒமார் ஹசான் அல்-பஷீருக்கு (President Omar Hassan al-Bashir) ஊழல் குற்றத்துக்காக முதியோர் சீர்த்திருத்தப் பள்ளியில் 2 ஆண்டு இருக்குமாறு உத்தரவிடப்பட்டது.

Leave A Reply

Your email address will not be published.