இந்தியப் பொதுத்தேர்தலில் எத்தனைப் பேர் வாக்களித்தனர்?
இந்தியாவில் 6 வாரம் நீடித்த பொதுத்தேர்தலில் 642 மில்லியன் பேர் வாக்களித்ததாகத் தேர்தல் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
வாக்களிப்பு நேற்று முன்தினம் (ஜூன் 1) முடிவடைந்தது.
வாக்குகள் (ஜூன் 4) எண்ணப்படும்.
2019ஆம் ஆண்டில் நடந்த பொதுத்தேர்தலில் வாக்களித்த 612 மில்லியன் பேரைவிட இம்முறை அதிகமானோர் வாக்களித்திருக்கின்றனர்.
இந்த ஆண்டின் வாக்களிப்பு வரலாற்றுச் சிறப்புமிக்க ஒன்று எனத் தேர்தல் ஆணையத் தலைவர் கூறினார்.
வாக்குகள் எப்படி எண்ணப்படும் என்று எதிர்த்தரப்பு முன்வைத்த அக்கறைகளை அவர் நிராகரித்தார்.
ஏப்ரல் 19ஆம் தேதி தொடங்கிய வாக்களிப்பு 7 கட்டங்களாக நடந்தது.
பிரதமர் நரேந்திர மோடியின் பாரதிய ஜனதாக் கட்சி மாபெரும் வெற்றி காணும் என்று கருத்துக் கணிப்புகள் கூறுகின்றன.
முன்னைய பொதுத்தேர்தலைவிட அந்தக் கட்சி இந்த முறை அதிகமான இடங்களைக் கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது.