93 வயதில் 5ஆவது திருமணம்.

ஊடகத் தொழிலதிபர் ரூபர்ட் மர்டோக் (Rupert Murdoch) 93 வயதில் 5ஆவது முறை திருமணம் செய்துள்ளார்.

67 வயது எலினா ஸுக்கோவாவை (Elena Zhukova) அவர் சனிக்கிழமை (1 ஜூன்) மணம் முடித்தார்.

ரஷ்யாவைச் சேர்ந்த ஸுக்கோவா முன்பு உயிரியல் ஆய்வாளராய்ப் பணியாற்றியதாக BBC தெரிவித்தது.

ஆஸ்திரேலியாவில் பிறந்த மர்டோக்கிற்கு 6 பிள்ளைகள் உள்ளனர்.

News Corporation நிறுவனத்தின் தலைவராக அவர் இருந்தார்.

News Corporation நிறுவனம், Fox News, the Wall Street Journal, the Sun, the Times ஆகிய செய்தித்தளங்களின் உரிமையாளர்.

மர்டோக் சென்ற ஆண்டு Fox, News Corp நிறுவனங்களின் தலைவர் பதவியில் இருந்து விலகினார்.

தற்போது அவரது மகன் அந்தப் பதவியை ஏற்றுள்ளதாக BBC தெரிவித்தது.

Leave A Reply

Your email address will not be published.