ஒரு வாரத்திற்கு மதுக்கடையை மூட முடிவு

பல பிரதேச செயலகங்களில் அமைந்துள்ள அனைத்து உரிமம் பெற்ற மதுபானசாலைகளும் பொசன் வாரத்தில் மூடப்படும் என இலங்கை கலால் திணைக்களம் அறிவித்துள்ளது.
எதிர்வரும் ஜூன் 18 மற்றும் ஜூன் 24 ஆம் திகதிகளில் இந்த மதுபானக் கடைகளை மூடுவதற்கு தீர்மானித்துள்ளதாக கலால் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.