தமிழக விளவங்கோடு இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி

தமிழகத்தின் விளவங்கோடு சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது.
அக்கட்சி வேட்பாளர் தாரகை கத்பட் வாக்கு எண்ணிக்கையின் போது தொடக்கம் முதலே முன்னிலை வகித்து வந்தார்.
இந்நிலையில், 22 சுற்றுகளாக நடத்தப்பட்ட வாக்கு எண்ணிக்கையின்போது 89,387 வாக்குகளுடன் அவர் வெற்றி பெறுவது உறுதியானது.