மீண்டும் மோடி: தேசிய ஜனநாயக கூட்டணி 292, இந்தியா 234 தொகுதிகளில் வெற்றி!

நாடு முழுவதும் 7 கட்டங்களாக நடைபெற்ற மக்களவைத் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை செவ்வாய்க்கிழமை(மே 4) காலை 8 மணிமுதல் நடைபெற்றது.

இந்த தேர்தலின் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 292 தொகுதிகளில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மையை பெற்றுள்ளது.

பாஜகவுக்கு எதிரான கட்சிகள் ஒன்றிணைந்து ’இந்தியா’ என்ற பெயரில் உருவான கூட்டணி 234 தொகுதிகளில் வெற்றி அடைந்துள்ளது.

பாஜக 240 தொகுதிகளிலும் காங்கிரஸ் 99, சமாஜவாதி 39, திரிணமூல் காங்கிரஸ் 29, திமுக 21, தெலுங்கு தேசம் 16 தொகுதிகளிலும் வெற்றி பெற்றுள்ளன.

ஆட்சி அமைப்பதற்கான பெரும்பான்மை 272 தொகுதிகளில் எந்தக் கட்சியும் வெற்றி பெறாததால், தனித்து ஆட்சி அமைக்க முடியாத சூழல் உருவாகியுள்ளது.

கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜக மட்டும் 303 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 தொகுதிகளில் வென்றிருந்தது.

அதேபோல், கடந்த தேர்தலில் 52 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்த காங்கிரஸ் தற்போது 99 தொகுதிகளில் வென்றுள்ளது.

இந்த முறை பாஜக 36.56 சதவிகிதமும், காங்கிரஸ் 21.19 சதவிகிதமும் வாக்குகள் பெற்றுள்ளன.

கட்சிவாரியாக

தேசிய ஜனநாயகக் கூட்டணி

பாஜக – 240

தெலுங்கு தேசம் – 16

ஐக்கிய ஜனதா தளம் – 12

சிவசேனை(ஷிண்டே) – 7

லோக் ஜனசக்தி ராம்விலாஸ் – 5

மதசார்பற்ற ஜனதா தளம் – 2

ஜனசேனா – 2

ராஷ்டிரிய லோக் தளம் – 2

தேசியவாத காங்கிரஸ் – 1

அப்னா தால் (சோனிலால்) – 1

பிற – 4

மொத்தம் – 292

இந்தியா கூட்டணி

காங்கிரஸ் – 99

சமாஜவாதி – 37

திரிணமூல் – 29

திமுக – 22

சிவசேனை(உத்தவ்) – 9

தேசியவாத காங்கிரஸ்(சரத்) – 8

மார்க்சிய கம்யூ. – 4

ராஷ்டிரிய ஜனதா தளம் – 4

ஆம் ஆத்மி – 3

ஜேஎம்எம் – 3

முஸ்லிம் லீக் – 3

இந்திய கம்யூ. – 2

விடுதலை சிறுத்தைகள் – 2

ஜம்மு – காஷ்மீர் தேசிய மாநாட்டு கட்சி – 2

கேரள காங்கிரஸ் – 1

மதிமுக – 1

பிற – 5

மொத்தம் – 234

தனித்துப் போட்டியிட்ட கட்சிகள்

ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் – 4

ஏஐஎம்ஐஎம் – 1

சிரோமணி அகாலி தளம் – 1

ஜோரம் மக்கள் இயக்கம் – 1

சிக்கிம் கிராந்திகாரி மோர்ச்சா -1

சுயேச்சைகள் – 7

பிற – 2

மொத்தம் – 17

Leave A Reply

Your email address will not be published.