15 தீவிரவாத அமைப்புகள் மற்றும் 210 பேரின் அனைத்து சொத்துக்களும் முடக்கம்!
பயங்கரவாத மற்றும் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்ட 15 தீவிரவாத அமைப்புகளுக்கும், 210 நபர்களுக்கும் சொந்தமான அனைத்து நிதி, சொத்துக்கள் மற்றும் பொருளாதார வளங்களை முடக்குமாறு பாதுகாப்பு அமைச்சகம் , சிறப்பு வர்த்தமானி அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் கமல் குணரத்னவினால் வெளியிடப்பட்டுள்ள விசேட வர்த்தமானி அறிவித்தலின் பிரகாரம், ஐக்கிய நாடுகள் சபையின் உத்தரவுக்கு அமைய இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு, தமிழர் புனர்வாழ்வு அமைப்பு, உலகத் தமிழர் இயக்கம், எல்லை தாண்டிய தமிழீழ அரசு, உலகத் தமிழர் நிவாரண நிதி, தேசிய தவ்ஹித்ஜமாத், ஜமாத் மிலாதே, கனடியத் தமிழ்த் தேசியப் பேரவை ஆகியன இந்த சொத்துக்களை சொத்துக்களும் முடக்குவதற்கு இந்த தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது .