சிறுவனை தாக்கும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டவருக்கு கொலைமிரட்டல்
சிறு குழந்தையை கொடூரமாக தாக்கும் வீடியோவில் இருந்த குற்றவாளி வெலிஓயா குகுல் சமிந்த கைதாகி உள்ள நிலையில் , சம்பவத்தை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்ட சமூக ஆர்வலருக்கு கொலைமிரட்டல்…அவரது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் சஸ்பெண்ட்…
சிறு குழந்தைக்கு சோறு ஊட்டும் போது மிகவும் மனிதாபிமானமற்ற முறையில் தாக்கிய சிறுதந்தை மற்றும் குடும்பங்களைச் சேர்ந்த 4 பேரை வெலிஓயா பொலிஸ் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப் படை அதிகாரிகள் அடங்கிய குழுவொன்று திரியாய பிரதேசத்தில் வைத்து இன்று (5)கைது செய்துள்ளது.
குழந்தையை திட்டி தாக்கியவர் வெலிஓயா குக்குல் சமிந்த என்பதை பலரும் அடையாளம் கண்டிருந்தனர்.
குழந்தையை தாக்கியவர் அந்த குழந்தையின் கள்ள காதலர் எனவும் , அவர் போதைப்பொருளுக்கு அடிமையானவர் எனவும் தெரியவந்துள்ளதாக வெலிஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சிறு குழந்தை சீனி போத்தலில் கையை விட்டு திருட்டுதனமாக சிறிது சீனியை சாப்பிட்டதாகக் கூறியே குழந்தையை அடித்துள்ளார். இதை குழந்தையின் தாயும், தாயின் தாயும் மற்ற இரண்டு குழந்தைகளும் சம்பவத்தைத் தடுக்க எந்த முயற்சியும் எடுக்காமல் தாக்குதலைப் பார்த்துக் கொண்டிருந்தமை வீடியோவில், தெளிவாக தெரிகிறது.
இதுபோன்ற தாக்குதல்களை தடுக்க நடவடிக்கை எடுக்காதது மிகவும் கடுமையான குற்றம் என்பதால் தாக்கும் போது பார்த்துக் கொண்டிருந்தவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
வெலிஓயா ஹன்சவில கிராமத்தில் வசிக்கும் இந்த குடும்பம் குறித்து வெலிஓயா பொலிஸாருக்கு தகவல் கிடைத்ததையடுத்து, பொலிஸ் அதிகாரிகள் குழுவொன்று குறித்த நபரை தேடிச் சென்றபோதும், அவர் தனது குடும்ப உறுப்பினர்களுடன் வீட்டில் இருந்து தலைமறைவாகி இருந்துள்ளார்.
பின்னர், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் மற்றும் வெலிஓயா பொலிஸ் நிலைய பொறுப்பாளர் ஆகியோர் மேற்கொண்ட விசாரணைகளின் போது, சந்தேக நபரும் அவரது குடும்பத்தினரும் திரியாய பிரதேசத்தில் உள்ள வீடொன்றில் பதுங்கி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.
பின்னர் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேக நபர்களையும் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெலிஓயா பிரதேசத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலர் குழந்தை தாக்கப்படுவதை காணொளியாக வெளியிட்டமைக்காக கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதுடன், அவரது சமூக வலைத்தள கணக்குகள் அனைத்தும் சில குழுக்களால் முடக்கப்பட்டுள்ளன.
இது குறித்து அவர் , கவர்னர் அலுவலகம் மற்றும் பல பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளிடம் புகார் அளித்துள்ளார்.
https://streamable.com/qc7ncx