அநுரவின் அறிக்கையை, சஜித் பிரதியெடுத்து பேசியதாக பாராளுமன்றத்தில் அமளி.
பல்கலைக்கழக கல்விசாரா ஊழியர்களின் பிரச்சினைகள் தொடர்பில் பாராளுமன்ற நிலையியற் கட்டளையின் கீழ் முன்வைத்த விடயத்தையே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவும் முன்வைத்ததாக தேசிய மக்கள் சக்தியின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான அனுர திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் பாராளுமன்றத்தில் சிறுபிள்ளைத்தனமான ஆட்டம் ஆடுவதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.
இந்தக் கேள்வியை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் எவ்வாறு சமர்ப்பித்தீர்கள் என்றும், பின்னர் எதிர்க்கட்சித் தலைவர் எவ்வாறு தமக்கு முன்னால் அதே கேள்வியை எழுப்பினார் என்றும் அனுர திஸாநாயக்க சபாநாயகரிடம் வினவினார்.
அதன் பிரகாரம் எதிர்க்கட்சி உறுப்பினர் என்ற ரீதியில் பாராளுமன்றத்திற்கு அனுப்பப்படும் கேள்விகளை , இனிமேல் எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்திற்கு அனுப்பாமல் நேரடியாக பாராளுமன்ற பொதுச் செயலாளருக்கே அனுப்பி வைக்கப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.