ஆந்திராவில் அதிரடி: சந்திரபாபு நாயுடு ஆட்சி அமைக்கிறார்; ஆட்டம் கண்ட ஜெகன் மோகன் ரெட்டி
ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளார்.
மக்களவைத் தேர்தலுடன் ஆந்திர சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் மொத்தம் உள்ள 175 தொகுதிகளிலும் 25 மக்களவை தொகுதிகளிலும் அரசியல் கட்சிகள் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டன.
இந்நிலையில், வாக்கு எண்ணிக்கை தொடங்கியது முதல் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் கட்சியும் அதன் கூட்டணிக் கட்சிகளும் பெரும்பாலான இடங்களில் முன்னிலை வகித்தன.
ஜூன் 4ஆம் தேதி பிற்பகல் நிலவரப்படி, தெலுங்கு தேசம் கட்சி 104 இடங்களிலும், ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான அணி பத்து இடங்களிலும் முன்னிலையில் இருப்பதாக ஊடகத் தகவல்கள் தெரிவித்தன.
இதேபோல் அம்மாநிலத்தில் உள்ள 27 மக்களவைத் தொகுதிகளில் தெலுங்கு தேசம் கூட்டணி 17 இடங்களிலும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் 8 தொகுதிகளிலும் முன்னிலை வகித்தன.