ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு தேவை.
இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையைப் பெற தவறிவிட்டது.
இந்தியத் தேர்தல் ஆணையம் வெளியிட்ட தகவலின்படி பாரதிய ஜனதா கட்சி 240 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.
ஆனால் ஆட்சி அமைக்க 272 இடங்கள் தேவை.
இதற்கு முன்பு நடந்த இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்களில் (2014, 2019) அபார வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்தது.
ஆனால் இம்முறை நிலைமை மாறியுள்ளது.
ஆட்சி அமைக்க கூட்டணி கட்சிகளின் ஆதரவு பாஜகவுக்கு அவசியமாகி உள்ளது.
குறிப்பாக, ஆந்திர பிரதேசத்தில் சந்திர பாபு நாயுடுவின் தலைமையிலான தெலுங்கு தேசக் கட்சி, பீகாரில் நிதிஷ் குமாரின் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளம் ஆகியவற்றின் ஆதரவு பாஜகவுக்குத் தேவைப்படுகிறது.
மறுமுனையில், காங்கிரஸ் 99 தொகுதிகளை வென்றுள்ளது.
2019ஆம் ஆண்டில் அது 52 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.
2014ஆம் ஆண்டிலிருந்து வீசிய மோடி அலையை காங்கிரஸ் தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி தடுத்திருப்பது ஆச்சரிய அலைகளை எழுப்பியுள்ளது.