திசைகாட்டி நிதியமைச்சரை கடுமையாக சாடிய பொருளாதார ஆசிரியர்.
தேசிய மக்கள் சக்தியின் தேசிய செயற்குழு உறுப்பினர், பொருளாதார சபை உறுப்பினர் சுனில் ஹந்துன்நெத்தி அண்மையில் தெரிவித்த கருத்துக்கு பொருளாதார கல்வி விரிவுரையாளர் தனுஷ்க லக்மால் கடுமையாக பதிலளித்துள்ளார்.
உலகின் முன்னணி முதலாளிகளில் ஒருவரான எலோன் மஸ்க் ஒரு பொருளாதாரக் கொலையாளி என்று ஹந்துன்நெத்தி கூறியதை அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
வர்த்தகர்களை கட்டியெழுப்பாமல் ஒரு நாட்டின் பொருளாதாரத்தை கட்டியெழுப்ப முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அரசுகள் வணிகம் செய்து பொருளாதாரத்தை நடத்தும் முறை, நவீன உலகில் ஒழிக்கப்பட்டுவிட்டதாகவும், அத்தகைய பொருளாதார மாதிரிகள் வட கொரியா மற்றும் கியூபாவில் மட்டுமே எஞ்சியுள்ளதாகவும், அந்த நாடுகளும் மிகவும் கடினமான சூழ்நிலையில் இருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.