Elon Musk’s StarLink இலங்கையில் செயற்பாடுகளை ஆரம்பிப்பதற்கான அனுமதியைப் பெற்றுள்ளது
அமெரிக்காவின் Starlink கம்பனிக்கு நாட்டில் செய்மதி தொழில்நுட்பத்தின் அடிப்படையிலான இணைய சேவைகளை வழங்குவதற்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை சபை அனுமதி வழங்கியுள்ளது.
பொதுமக்களிடம் கலந்தாலோசித்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கனக ஹேரத் தெரிவித்துள்ளார்.
இந்தோனேசியாவில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க மற்றும் அமெரிக்க ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் தலைவர் எலோன் மஸ்க் ஆகியோருக்கு இடையில் நடைபெற்ற மாநாட்டில் இது தொடர்பான கலந்துரையாடலும் இடம்பெற்றிருந்தது.