மின் கட்டணம் பெருமளவு குறையும்.. புதிய விலைகள் இதோ
ஜூலை முதலாம் திகதி முதல் மின் கட்டணத்தை குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
அதன்படி, உள்நாட்டு வகை நுகர்வோருக்கு கூடுதல் நிவாரணம் வழங்கப்பட உள்ளது.
மின்சார கட்டணத்தை குறைக்கும் யோசனைக்கு பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் அங்கீகாரம் வழங்கப்படும் என அமைச்சு தெரிவித்துள்ளது.
இதன்படி, 0-30 அலகுகளுக்கு இடைப்பட்ட அலகுக்கு, 08 ரூபாயிலிருந்து 06 ரூபாவாக குறைக்கப்படவுள்ளது.
30-60 யூனிட்டுகளுக்கு இடைப்பட்ட யூனிட் 20ல் இருந்து 09 ரூபாயாகவும், 60-90 யூனிட்டுக்கு இடைப்பட்ட அலகு 30லிருந்து 18 ரூபாயாகவும் குறைக்கப்படும்.
90-180 யூனிட் ஒன்றின் விலையை 50 ரூபாயிலிருந்து 30 ரூபாவாக குறைக்க முன்மொழியப்பட்டுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.