ரணிலுக்காக ஹம்பாந்தோட்டையில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மக்கள் பேரணி.. அமரவீர ஏற்பாட்டில்..
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் எதிர்வரும் ஜுன் மாதம் 08ஆம் திகதி பிற்பகல் 2.00 மணிக்கு அம்பாந்தோட்டை நகர மையத்தில் மக்கள் பேரணியை நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
விவசாய மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மகிந்த அமரவீரவினால் இந்த மக்கள் பேரணி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
புதிய கூட்டணியின் ஆரம்பத்துடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து, புதிய கூட்டணி வேலைத்திட்டம் வலுப்பெற்றுள்ளது. எதிர்காலத்தில் மேலும் பல கட்சிகள், தொழிற்சங்கங்கள் மற்றும் சிவில் அமைப்புகளை இணைத்து மாபெரும் பரந்த கூட்டணி உருவாக்கப்படும் என திரு.நிமல் லான்சா குறிப்பிடுகின்றார்.
நிமல் சிறிபால டி சில்வா, மஹிந்த அமரவீர, லசந்த அழகியவன்ன, துமிந்த திஸாநாயக்க, சுசில் பிரேம்ஜயந்த, நளின் பெர்னாண்டோ, அனுர பிரியதர்ஷன யாப்பா, நிமல் லான்சா, பிரியங்கர ஜயரத்ன, உட்பட பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், பிராந்திய சபை உறுப்பினர்கள். பிரதிநிதிகள் மற்றும் சிவில் ஆர்வலர்கள் பங்கேற்க உள்ளனர்.