இன்று நள்ளிரவு முதல் ரயில் வேலை நிறுத்தம்!

புகையிரத சாரதிகளின் பதவி உயர்வு தாமதம் உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை முன்வைத்து, ரயில் சாரதிகளின் ‘இன்ஜின் இயக்க பொறியியலாளர்கள்’ சங்கம் இன்று (06) நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பை ஆரம்பிக்கவுள்ளதாக தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

புகையிரத சாரதிகளின் பிரச்சினைகளுக்கு ரயில்வே பொது முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகள் தீர்வுகாணத் தவறியதன் காரணமாகவே அதிகாரிகள் இந்த தொழில் நடவடிக்கையில் இறங்க நேரிட்டதாக சங்கம் மேலும் தெரிவித்துள்ளது.

Leave A Reply

Your email address will not be published.