X தளத்தில் ஆபாச வீடியோக்கள் – சில நாடுகள் கண்டனம்.
X தளம் ஆபாசக் காணொளிகளை அதிகாரபூர்வமாக அனுமதிக்க முடிவு செய்திருக்கிறது. அதைப் பல நாடுகள் கண்டிக்கின்றன.
Twitter என்று முன்பு அழைக்கப்பட்ட X தளத்தில் ஆபாசக் காணொளிகளுக்கு எதிராகக் கொள்கை எதுவும் இதுவரை இருந்ததில்லை.
அதுபோன்ற காணொளிகள் இடம்பெற்று வந்ததாகக் கவனிப்பாளர்கள் கூறுகின்றனர்.
இந்நிலையில் X தளம் காணொளிகளுக்கு அதிகாரத்துவமாக அனுமதி வழங்குகிறது.
சம்மதத்துடன் எடுக்கப்படும் காணொளிகள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று X சொன்னது.
18 வயதுக்கு உட்பட்டவர்களுக்கு மட்டும் அவற்றைக் காணத் தடை விதிக்கப்படும்.
புதிய அறிவிப்பினால் சில நாடுகள் கோபம் அடைந்துள்ளன.
இந்தோனேசியா, மலேசியா போன்ற தென்கிழக்காசிய நாடுகள் கண்டனம் தெரிவித்தன.
Xஇன் கொள்கை உள்நாட்டுச் சட்டங்களை மீறுவதாக அந்த நாடுகள் கூறின.