எதிர்க்கட்சித் தலைவர் சஜித் யாழ். விஜயம்!
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ எதிர்வரும் 9 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளார்.
அவர் 13 ஆம் திகதி வியாழக்கிழமை வரை யாழ்ப்பாணத்தில் தங்கி நின்று பல தரப்பினரையும் சந்திக்கவுள்ளார்.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சி தொகுதி பிரதம அமைப்பாளர் மரியதாஸ் மரியசீலன் தலைமையில் கிளி/பாரதி வித்தியாலயம், யாழ்ப்பாணம் தொகுதி பிரதம அமைப்பாளர் வெற்றிவேலு யஜேந்திரன் தலைமையில் யா/வைத்தீஸ்வரா கல்லூரி, நல்லூர் தொகுதி பிரதம அமைப்பாளர் அ. கிருபாகரன் தலைமையில் யா/சென். பெனடிக்ற் வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை அவர் வழங்கி வைப்பார்.
எதிர்வரும் திங்கட்கிழமை பருத்தித்துறை மற்றும் உடுப்பிட்டி தொகுதிகளுக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், யா/கொட்டாவத்தை அமெரிக்க மிஷன் தமிழ்க் கலவன் பாடசாலை, உடுப்பிட்டி மகளிர் கல்லூரி ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார். அன்றைய தினம் காங்கேசன்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் வன்னியசிங்கம் பிரபாகரன் தலைமையில் அளவெட்டி யா/அருணோதயாக் கல்லூரிக்கு 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்புச் செய்யவுள்ளார்.
எதிர்வரும் செவ்வாய்கிழமை எதிர்க்கட்சித் தலைவர், ஊர்காவற்துறை தொகுதி பிரதம அமைப்பாளர் குருபரன் மதன்ராஜ் தலைமையில் யா/நெடுந்தீவு மகாவித்தியாலம், மானிப்பாய் தொகுதி அமைப்பாளர் அனோஜன் அருந்தவநாதன் தமையில் யா/சண்டிலிப்பாய் இந்துக் கல்லூரி, யா/புனித. ஹென்றியரசர் கல்லூரி இளவாலை ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.
எதிர்வரும் புதன்கிழமை கோப்பாய் தொகுதிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, யா/அத்தியார் இந்துக் கல்லூரிக்கு 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
தொடர்ந்து வட்டுக்கோட்டை தொகுதி பிரதம அமைப்பாளர் சதாசிவன் தலைமையில் யா/யாழ்ற்ரன் கல்லூரி காரைநகர் பாடசாலைக்கு 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறையை அன்பளிப்பு செய்யவுள்ளார்.
மேலும், யா/சுழிபுரம் விக்டோரியா கல்லூரிக்கு விஜயம் செய்யும் எதிர்க்கட்சித் தலைவர், பஸ் ஒன்றை அன்பளிப்புச் செய்யவுள்ளார்.
எதிர்வரும் வியாழக்கிழமை சாவகச்சேரி தொகுதி பிரதம அமைப்பாளர் கந்தையா மயில்வாகனம் தலைமையில் யா/சாவகச்சேரி இந்துக் கல்லூரி, கிளிநொச்சி் தொகுதி அமைப்பளர் மொகமட் காசிம் தலைமையில் கிளி/இரணைதீவு றோ.க.த. க. ஆகிய பாடசாலைகளுக்கு தலா 11 இலட்சம் பெறுமதியான ஸ்மார்ட் வகுப்பறைகளை வழங்கி வைப்பார்.
நாடாளுமன்ற உறுப்பினர் எரான் விக்கிரமரத்ன மற்றும் கட்சியின் பிரதிச் செயலாளர் உமாச்சந்திரா பிரகாஷ் ஆகியோருடன் யாழ்ப்பாணம் தேர்தல் மாவட்டத்தில் பல சமூக, அரசியல் செயற்பாடுகளை முன்னெடுக்கும்
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தனது விஜயத்தின்போது, அரசியல் தலைவர்கள், புத்திஜீவிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் பலரைச் சந்திக்கவுள்ளார்.