இனியும் பொய் சண்டித்தனம் வேண்டாம்: சஜித்துக்கு அனுர எச்சரிக்கை

ITN அலைவரிசையில் நேற்று (6) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த அனுர – சஜித் விவாதத்தில் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க மாத்திரமே கலந்துகொண்டார்.

நிகழ்ச்சியின் ஆரம்பத்தில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு விவாதத்தில் பங்கேற்க இன்னும் வாய்ப்பு இருப்பதாகவும், சஜித் பிரேமதாச பங்கேற்பதாக இருந்தால், விடியும்வரை காத்திருக்கத் தயார் என்றும் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்தார்.

எனினும், திரு.சஜித் பிரேமதாச தொலைபேசியைக் கூட எடுக்கிறார் இல்லை எனவும், அவர் இல்லாத காரணத்தினால், விவாதத்தை உரையாடலாக மாற்றத் தீர்மானிக்கப்பட்டதாகவும் ITN ஊழியர்கள் தெரிவித்தனர்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு விவாதம் குறித்து சவால் விடுவதை தவிர்க்க வேண்டும் என அநுரகுமார திஸாநாயக்க, தெரிவித்தார்.

“சஜித் இல்லாததால், இந்த விவாதத்தை மீண்டும் விவாதிப்பதோ, அவரைப் பற்றி பேசுவதோ எங்களுக்கு நியாயமில்லை. அவர் கண்டிப்பாக வர மாட்டார், அதனால் இன்று எதுவும் நடக்காது என இத்துடன் முடித்துக் கொள்ளலாம். ஆனால் என்னிடம் இன்னொரு ஆலோசனை உள்ளது, நீங்களும் நேரம் ஒதுக்கி இருக்கிறீர்கள், நானும் நேரம் ஒதுக்கி விட்டேன், நான் இந்த சேனலுக்கு 3 – 4 வருடங்களுக்கு பிறகு வந்துள்ளேன், அதனால்தான் எங்களது விவாதத்திற்குப் பதிலாக ஒரு கலந்துரையாடலை செய்வோம்.

இனி விவாதம் பற்றி பேசாதிருப்போம், இன்று அதிகாலை வரைக்கும் அவருக்கு நேரம் இருக்கு, என்னால் விடியும் வரைக்கும் இருப்பேன், அவர் தூங்காத தலைவர் என்பதால், அவருக்கு பிரச்சனை இருக்காது, ஆனால் நாங்கள் தூங்காத தலைவர்கள் இல்லை , நான் நன்றாக தூங்குபவன். பள்ளிகளுக்குச் சென்று பயமா, சந்தேகமா அல்லது சண்டித்தனமா என பாசாங்கு செய்யாதீர்கள். நான் ஒன்றை சொல்கிறேன், இது ஒரு நோய், இதற்குப் பிறகு நான் அவருடன் வாதிட மாட்டேன் என்றார் தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க .

Leave A Reply

Your email address will not be published.