சஜித்தை 2 முறை சந்தித்த சம்பிக்க .. புதிய வழியில் ரணிலுக்கு ஆதரவளிக்க பசிலோடு ரகசிய சந்திப்பு

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ஷவிற்கும் , ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் சம்பிக்க ரணவக்கவிற்கும் இடையில் கடந்த செவ்வாய்கிழமை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
SJB தலைவர் சஜித் பிரேமதாசவை சில தினங்களுக்கு முன்னர் இரண்டு தடவைகள் சந்தித்த பின்னர் இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர்களான ரஞ்சித் மத்தியபண்டார மற்றும் முஜிபுர் ரஹ்மான் ஆகியோரின் ஆதரவோடு இந்த சந்திப்புகள் இடம்பெற்றுள்ளன.
சம்பிக்க ரணவக்க , SJBயில் இணைந்து கொள்ள விருப்பம் தெரிவித்த போதிலும், சஜித் பிரேமதாச அது தொடர்பில் எந்த அக்கறையும் காட்டவில்லை என தெரியவருகிறது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க சம்பிக்க ரணவக்க தயாராகவுள்ளார்.
எவ்வாறாயினும், ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்படுவதால் ஏற்படும் முரண்பாடுகளை தீர்க்கும் நோக்கில், பசில் ராஜபக்ஷவுடனான சந்திப்பு இடம்பெற்றதாக நெருங்கிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சம்பிக்க ரணவக்க, ரணில் விக்கிரமசிங்கவுடன் நேரடியாக இணையாது நிமல் லான்சா மற்றும் பலர் இணைந்து கட்டியெழுப்பிய புதிய கூட்டணியில் இணைந்து, அதன் ஊடாக சம்பிக்க ரணவக்க , ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிப்பார் என மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.