ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

2024 டி20 உலகக் கோப்பை தொடரில் யாரும் எதிர்பார்க்காத வகையில் நியூசிலாந்து அணியை 84 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆப்கானிஸ்தான் அணி.

இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி பந்துவீச்சில் பெரும் ஆதிக்கம் செலுத்தி வெற்றி பெற்றது. இந்த உலகக் கோப்பை தொடரில் ஆப்கானிஸ்தான் அணி சில போட்டிகளில் வெல்லும் என பலரும் நினைத்திருந்தாலும் இப்படி முக்கிய அணிகளுக்கு எதிராக ஆதிக்கம் செலுத்தி இமாலய வெற்றி பெறும் என யாரும் எதிர்பார்க்கவில்லை.

நியூசிலாந்து அணி டாஸ் வென்று பந்துவீச்சை தேர்வு செய்தது. ஆப்கானிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர்கள் ரஹ்மானுல்லா குர்பாஸ் மற்றும் இப்ராஹீம் சத்ரான் மிகச் சிறந்த துவக்கத்தை அளித்தனர். இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 103 ரன்கள் சேர்த்தது. இதுவே இந்தப் போட்டியில் ஆப்கானிஸ்தான் அணியின் அஸ்திவாரமாக அமைந்தது.

இப்ராஹீம் சத்ரான் 41 பந்துகளில் 44 ரன்கள் எடுத்த ஆட்டம் இழந்தார். அவருக்கு பின் வந்த அஸ்மதுல்லா ஓமர்சாய் 13 பந்துகளில் 22 ரன்கள் சேர்த்தார். அதன் பின் அவர் ஆட்டம் இழந்தார். ஆப்கானிஸ்தான் அணி 17 ஓவர்களில் 127 ரன்களுக்கு 2 விக்கெட் இழந்து இருந்தது. ஆப்கானிஸ்தான் துவக்க வீரர் ரஹ்மானுல்லா குர்பாஸ் கடைசி ஓவர் வரை தாக்குப் பிடித்து 56 பந்துகளில் 80 ரன்கள் சேர்த்து ஆட்டம் இழந்தார். 20 ஓவர்களின் முடிவில் ஆப்கானிஸ்தான் அணி 6 விக்கெட்கள் இழப்பிற்கு 159 ரன்கள் எடுத்தது.

அந்த அணியின் மிடில் ஆர்டர் வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டம் இழந்து இருந்தனர். ஆனாலும் துவக்க வீரர்கள் அபாரமாக ஆடியதால் அந்த அணி பெரிய ஸ்கோரை எடுத்திருந்தது. 170 ரன்கள் என்ற சவாலான இலக்கை நியூசிலாந்து அணி சேஸிங் செய்தது. அந்த அணியின் துவக்க வீரர் ஃபின் ஆலன் தான் சந்தித்த முதல் பந்திலேயே டக் வுட் ஆனார்.

அதன் பின் டெவான் கான்வே 8 ரன்கள், கேன் வில்லியம்சன் 9 ரன்கள், டேரில் மிட்செல் 5 ரன்கள், மார்க் சாப்மேன் 4 ரன்கள், மைக்கேல் பிரேஸ்வெல் டக் அவுட், மிட்செல் சான்ட்னர் 4 ரன்கள் என வரிசையாக விக்கெட்களை இழந்தது நியூசிலாந்து அணி. 59 ரன்களுக்கு எட்டு விக்கெட்களை இழந்தது.

அப்போதே அந்த அணியின் தோல்வி உறுதியானது. பின்னர் 15 வது வரை தாக்குப்பிடித்த நியூசிலாந்து 15.2 ஓவர்களில் 75 ரன்கள் மட்டுமே எடுத்து ஆல் அவுட் ஆனது. ஆப்கானிஸ்தான் அணியின் வேகப் பந்துவீச்சாளர் ஃபாசல்ஹக் ஃபரூக்கி அபாரமாக வந்து வீசி 3.2 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்களை சாய்த்தார்.

உலகின் சிறந்த சுழற் பந்துவீச்சாளரான ரஷீத் தான் 4 ஓவர்களில் 17 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்களை வீழ்த்தினார். முஹம்மத் நபி 4 ஓவர்களில் 16 ரன்கள் கொடுத்து 2 விக்கெட்களை வீழ்த்தி இருந்தார். இதை அடுத்து ஆப்கானிஸ்தான் அணி 84 ரன்கள் வித்தியாசத்தில் இமாலய வெற்றி பெற்று நியூசிலாந்து அணிக்கு அதிர்ச்சி அளித்தது.

Leave A Reply

Your email address will not be published.