தமிழகத்தின் ஆதரவின்றி மோடி வெற்றி பெற்றமை இலங்கைக்கு நன்மையே! – இப்படிச் சொல்கின்றார் கம்மன்பில.
இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றி இலங்கைக்குச் சாதகமாக அமையும் என்று பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் கூறியதாவது:-
“இந்திய நாடாளுமன்றத் தேர்தலில் பாரதிய ஜனதா கட்சி கூட்டணி 300 முதல் 350 ஆசனங்களைக் கைப்பற்றக்கூடும் என எதிர்பார்த்தேன். எப்படி இருந்தாலும் பிரதமர் மோடியின் வெற்றி இலங்கைக்கு நன்மை பயக்கும்.
ஏனெனில் இந்தியாவில் நிலையானதொரு ஆட்சி இருக்கும்போது, இலங்கை தொடர்பான கொள்கையை மத்திய அரசே தீர்மானிக்கும்.
சிலவேளை மத்திய அரசு பலவீனமாகி, ஆட்சியமைக்க தமிழ் நாட்டின் உதவி தேவைப்படும் பட்சத்தில் இலங்கை தொடர்பான கொள்கையைத் தமிழகமே தீர்மானிக்கும். அப்போதுதான் இரு நாட்டுக்கும் இடையிலான உறவில் தாக்கம் ஏற்படும். எனினும், தமிழகத்தின் ஆதரவின்றி மோடி வெற்றி பெற்றிருப்பது இலங்கைக்கு நல்லதே.” – என்றார்.
உதய கம்மன்பில Comadyயாக கருத்துகளை வைப்பதில் பேர் பெற்றவர்