இலங்கை சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திட்ட மீளாய்வு கலந்துரையாடல்.
இலங்கை சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திட்ட மீளாய்வு கலந்துரையாடல்
முல்லைத்தீவு மாவட்டத்தில் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திற்கு அங்கத்தவர்களை இணைத்துக்கொள்வதனை விரைவுபடுத்தும் நோக்கில் சமூக பாதுகாப்பு ஓய்வூதியத்திட்டம் தொடர்பான மீளாய்வு கலந்துரையாடலானது மாவட்ட அரசாங்க அதிபர் க.விமலநாதன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக சிறிய மாநாட்டு மண்டபத்தில் இன்று(30) மு.ப 09.00மணிக்கு இடம்பெற்றுள்ளது.
முதுமைக் காலத்தில் ஏற்படும் வறுமையினை குறைத்தலை நோக்காகக் கொண்ட சமூக பாதுகாப்பு பிரிவானது தற்போது ஓய்வூதியம் கிடைக்கப்பெறாத ஒவ்வொரு அங்கத்தவர்களையும் உள்வாங்கி பங்களிப்பு ஓய்வூதியத் திட்டமொன்றை அமைத்தல் தொடர்பாக அதிக கவனம் செலுத்தி வருகின்றது.
இக் கலந்துரையாடலில் வட கிழக்கு சிரே~;ட இணைப்பாளர் பா.பிரதீபன் அவர்கள் புதிய அங்தக்கதர்களை இணைத்துக்கொள்ளும் செயற்றிட்டத்தை முன்னெடுத்துச் செல்லும் வழிமுறைகள் மற்றும் ஓய்வூதியத்திட்ட நடைமுறைகள் தொடர்பாக விளக்கமளிக்கார். இச் செயற்றிட்டத்தை சகல கிராம சேவகர்களும் சமச்சீரான தன்மையுடன் முன்னெடுத்துச் செல்வதனூடாக இத் திட்டம் தொடர்பாக பெற்றோருக்கு பூரண விளக்கத்தை அளிப்பதனூடாக அவர்களை உள்வாங்க முடியும். இதனூடே உத்தியோகத்தர்கள் மக்களைத் தேடிச் செல்லாது மக்களே உத்தியோகத்தர்களை தேடிச்செல்லும் நிலையினை உருவாக்கும்படி கேட்டுக்கொண்டார்.
இத் திட்டமானது தற்போது முன்னெடுக்கப்படும் வழிமுறைகள் தொடர்பாக மாவட்ட செயலாளர் குறித்த பிரதேச செயலாளர்களிடம் கேட்டறிந்து கொண்டதுடன் இது தொடர்பாக அதிக விழிப்புணர்வுகளை முன்னெடுத்துச் செல்லுமாறு தெரிவித்தார்.
இக் கலந்துரையாடலில் மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர், மாவட்ட சமுர்த்தி உதவிப்பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், உதவி மாவட்ட செயலாளர், உதவித்திட்டமிடல் பணிப்பாளர்கள், சமூகசேவை உத்தியோகத்தர்கள், சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு உத்தியோகத்தர்கள் என பல்தரப்பட்டோர் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.