யாழில் அரசியல் கருத்துக் கள நிகழ்வு பெருமளவானோரின் பங்கேற்புடன் ஆரம்பம்!

ஈழத் தமிழர் சுயநிர்ணய உரிமை தொடர்பில் பொது நிலைப்பாடும், பொது வாக்கெடுப்பும் எனும் மக்கள் மன்றம் பெருமளவானோரின் பங்கேற்புடன் யாழ்ப்பாணத்தில் இடம்பெறுகின்றது.
அறிவோர் ஒன்றுகூடும் அரசியல் கருத்துக் கள நிகழ்வு, யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி தந்தை செல்வா கேட்போர் கூட்டத்தில் இன்று மாலை 3 மணிக்கு ஆரம்பமானது.
இந்த நிகழ்வில் சமயத் தலைவர்கள், அரசியல் பிரமுகர்கள், கல்விச் சமூகத்தினர், பொதுமக்கள் எனப் பெருமளவானோர் பங்கேற்றுள்ளனர்.