வெளியானது இந்திய அமைச்சரவை பதவிகளுக்கு நியமிக்கப்படும் அமைச்சர்கள் தொடர்பில் உத்தேச விபரங்கள்

பாரதிய ஜனதா கட்சி (BJP) 2024 மக்களவைத் தேர்தலில் அறுதிப் பெரும்பான்மையைப் பெறாத நிலையில் கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் அக்கட்சி ஆட்சி அமைத்துள்ளது.

எனவே முக்கிய கூட்டணி கட்சிகள் சில குறிப்பிடத்தக்க அமைச்சரவை பதவிகளுக்கு போட்டி போடுவதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இன்று இரவு இரவு 07.15 மணிக்கு ராஷ்டிரபதி பவனில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்பு விழா நடைபெறவுள்ளது.

இந்நிலையில் அமைச்சரவை பதவிகளுக்கு நியமிக்கப்படும் அமைச்சர்கள் தொடர்பில் தகவல் ஒன்று வெளியாகியுள்ளது.

அதன்படி டெல்லி வட்டார தகவல்களை கொண்டு நியமிக்கப்படும் அமைச்சரவை விபரங்கள் பின்வருமாறு…

உள்துறை, நிதி, பாதுகாப்பு, வெளியுறவு போன்ற முக்கிய அமைச்சகங்களை பாஜக வைத்திருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

குறிப்பாக புதிய அமைச்சரவையில் அமித் ஷா, ராஜ்நாத் சிங் போன்ற தலைவர்கள் இடம் பெறுவது உறுதி எனவும் முன்னாள் முதல்வர்களான சிவராஜ் சிங் சவுகான், பசவராஜ் பொம்மை, மனோகர் லால் கட்டார், சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கடும் போட்டியாளர்களாக உள்ளதாகவும் குறிப்பிடப்படுகிறது.

Leave A Reply

Your email address will not be published.