2025 வரவு செலவு திட்டம் புதிய ஜனாதிபதியிடம் கையளிக்கப்படும்.. அதுவரை இடைக்கால நிலையான கணக்கு.

தேர்தல் ஆண்டு காரணமாக, 2025 ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கு பதிலாக இடைக்கால நிலையான கணக்கு சமர்ப்பிக்கப்படும் என நிதி அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதித் தேர்தலுக்காக ஒவ்வொரு வேட்பாளரும் வெவ்வேறு விஞ்ஞாபனங்களை வெளியிடுகின்றனர். அதைச் செயல்படுத்துவதற்கு பட்ஜெட் முக்கியமானது.
இதன் விளைவாக, வெற்றிபெறும் வேட்பாளருக்குத் தேவையான வரவு செலவுத் திட்டத்தை முன்வைக்க வாய்ப்பு வழங்கப்படும் . அதுவரையான முதல் சில மாதங்களுக்கு இடைக்கால நிலையான கணக்கு சமர்ப்பிக்கப்படும்.