பாடசாலை மாணவர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளோம் : பிரதமர்

கோவிட் 19 அச்சுறுத்தலுக்கு மத்தியில் பாடசாலைகளை கூடிய விரைவில் ஆரம்பிக்குமாறு மாணவர்கள் விடுத்த கோரிக்கையை நிறைவேற்றியுள்ளதாக கொழும்பு இந்து கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய பிரதமர் தெரிவித்தார்.
கொழும்பு 04, பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா இன்று (30) நடைபெற்றது.
கல்லூரி அதிபர் டி.பி.பரமேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், பிரதம அதிதியாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச கலந்துகொண்டார்.
ராமச்சந்திர குருக்கள் பாபு சர்மா, கலாநிதி எஸ்.சந்தீர், அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், கல்லூரியின் ஆசிரியர்கள், பெற்றோர்கள், மாணவர்கள் உள்ளிட்ட பலரும் இதில் கலந்துகொண்டனர்.