உக்ரேன் போரில் இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – மீட்கும்படி குடும்பத்தினர் வேண்டுகோள்
உக்ரேனியப் போருக்குச் சென்ற இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்களை மீட்டுக்கொண்டுவர வேண்டும் என்று அவர்களின் குடும்பத்தினர் வேண்டுகோள் விடுக்கின்றனர்.
2022ல் இலங்கைப் பொருளியல் நொடித்தது.
அப்போது சிலர் நல்ல சம்பளத்துக்காக உக்ரேனியப் போருக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது.
2,000 டாலருக்கு மேல் சம்பளம் கொடுப்பதாக WhatsAppஇல் விளம்பரம் வந்ததாகச் சொல்லப்படுகிறது.
ரஷ்யாவில் வீடு கட்டிக் குடும்பத்தோடு தங்குவதற்கு நிலம் கொடுப்பதாகவும் வாக்குறுதி தரப்பட்டிருக்கிறது.
சிலர் 10,000 டாலர்வரை முகவருக்குப் பணம் கட்டிச் சென்றதாக அவர்களின் குடும்பத்தினர் கூறுகின்றனர்.
போரில் நல்ல அனுபவம் வாய்ந்த குறைந்தது 2,000 பேரைத் தேடுவதற்காக இலங்கை நாடாளுமன்றம் கடந்த மாதம் விசாரணையைத் தொடங்கியது.
போர்க்களத்தில் எத்தனை வெளிநாட்டவர் உள்ளனர் என்ற தகவலை ரஷ்யாவும் உக்ரேனும் வெளியிடவில்லை.