சர்வஜன வாக்கெடுப்பு இல்லாமல் ரணிலுக்கு இன்னும் ஒரு வருடம்..? சட்டமா அதிபரின் கருத்து கோரப்படும்?
குறித்த காலப்பகுதியில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ள போதிலும், அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி பதவிக்காலம் மற்றும் பாராளுமன்ற ஆயுட்காலத்தை நீடிக்க அரசாங்கம் முயற்சிகளை மேற்கொள்ளும் என அரசியல் வட்டாரங்களை மேற்கோள்காட்டி டெய்லி மிரர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
இதன்படி, மூன்றில் இரண்டு பெரும்பான்மையால் மாத்திரம் ஜனாதிபதி பதவிக் காலத்தை நீடிப்பதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் கருத்து கோரப்படும் எனவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது 19வது திருத்தம் மூலம் ஜனாதிபதியின் பதவிக் காலம் ஆறிலிருந்து ஐந்து வருடங்களாக சர்வஜன வாக்கெடுப்பு அல்லது மக்கள் அங்கீகாரம் இன்றி குறைக்கப்பட்டது.
அதன்படி, பதவிக் காலத்தை ஆறு ஆண்டுகளுக்கு மேல் நீட்டிக்க பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும், ஆனால் தற்போதுள்ள ஐந்தாண்டு கால எல்லையை 6 ஆண்டுகளாக நீட்டிக்க பொதுவாக்கெடுப்பு தேவையில்லை என்பது எழுப்பப்பட்டுள்ள வாதமாக உள்ளது.
உக்ரேன் போரில் இலங்கையின் முன்னாள் ராணுவ வீரர்கள் – மீட்கும்படி குடும்பத்தினர் வேண்டுகோள்
இலேசாகக் காயமுற்ற பயணிகளுக்கு US$10,000 இழப்பீடு வழங்கும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்
மலாவி துணை அதிபரோடு சென்றோரை பலிகொண்ட விமான விபத்து!
குணப்படுத்த முடியாத புற்றுநோய்… சிங்கப்பூரில் அவரது தலைமையில் நடைபெறும் இறுதிக் கலை நிகழ்ச்சி
OpenAI அம்சங்கள் கொண்ட Apple திறன்பேசிகள் Teslaஇல் தடை செய்யப்படும்: இலோன் மஸ்க்.
iPhoneஇல் ChatGPT – Apple நிறுவனத்தின் புதிய முயற்சி
ஐஸ் கட்டி மழையில் சிக்கிச் சேதமடைந்த விமானம்