ரணிலை ஆதரிக்க ராஜபக்சவினர் இல்லாத கூட்டணி..
எதிர்வரும் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு ஆதரவளிக்கும் வகையில் புதிய அரசியல் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் அரசாங்கத்திற்கும் எதிர்க்கட்சிக்கும் இடையில் கலந்துரையாடல் ஒன்று நடத்தப்பட்டுள்ளது.
இந்த புதிய கூட்டணிக்காக ராஜபக்சக்கள் எவரையும் இணைத்துக் கொள்வதில்லை என கடந்த 9ம் திகதி இடம்பெற்ற கலந்துரையாடலில் இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய மக்கள் சக்தி ஆகிய கட்சிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவும் இந்த கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்தக் கூட்டமைப்பை உருவாக்குவது தொடர்பில் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
பொதுஜன பெரமுனவை பிரதிநிதித்துவப்படுத்தும் அறுபதுக்கும் மேற்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டமைப்பில் இணையவுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
புதிய கூட்டணியின் விஞ்ஞாபனத்தை தயாரிப்பதற்கு ஏற்கனவே மூவர் நியமிக்கப்பட்டுள்ளதுடன், ஒரு வாரத்திற்குள் விஞ்ஞாபனத்தை தயாரித்த பின்னர் உடன்படிக்கைகளில் கைச்சாத்திடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.