ஆசிரியர்கள் வேலைநிறுத்தம் வெற்றி.. அதிகரிக்கும் சலுகைகள்

GCE(சாதாரண தர) விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் மற்றும் கண்காணிப்பாளர்களுக்கு வழங்கப்படும் கொடுப்பனவை அதிகரிப்பது தொடர்பான அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
அதற்காக நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கைகள் 14.06.2024 அன்று கிடைக்கப்பெறவுள்ளதுடன், அந்த அறிக்கை அடுத்த அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டு அதற்கேற்ப கொடுப்பனவுகள் அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.