ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சிவாஜிலிங்கம் அறிவிப்பு.

இந்த ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் சுயேட்சை வேட்பாளராக போட்டியிடவுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழ் மக்கள் கூட்டணியின் பொதுச் செயலாளருமான எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் (11) இடம்பெற்ற மத்திய கூட்டமொன்றில் கலந்து கொண்ட போது, ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை முன்வைக்க தமிழ் அரசியல் கட்சிகளுக்கு அதிக விருப்பம் இல்லை எனத் தோன்றியதால் இந்தத் தீர்மானத்தை எடுத்ததாகத் தெரிவித்தார்.

தமிழ் அரசியல் கட்சிகள் பொது வேட்பாளரை முன்வைக்க இன்னும் கால அவகாசம் உள்ளது என தெரிவித்த சிவாஜிலிங்கம், தமிழ் பொது வேட்பாளரை முன்வைத்தால் அந்த வேட்பாளரை ஆதரிப்பதற்காக , தனது தீர்மானத்தை வாபஸ் பெறுவேன் எனவும் தெரிவித்தார்.

வடக்கில் உள்ள தமிழ் அரசியல்வாதிகளுக்கு பொது வேட்பாளரை முன்னிறுத்துவதற்கு தைரியம் இல்லை எனவும், இது தமிழ் மக்களின் உரிமையை புறக்கணிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நாட்டில் தமிழ் மக்களின் உரிமைகளை வெளிக்காட்டவே தான் கடந்த பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் மஹிந்த ராஜபக்ஷவை எதிர்த்து போட்டியிட்டதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் அங்கு சுட்டிக்காட்டினார்.

Leave A Reply

Your email address will not be published.