தேசிய பிரச்சினைக்கு தீர்வு காண புதிய அரசியலமைப்பை திசைகாட்டி அரசாங்கம் கொண்டு வரும்.

இந்த நாட்டின் தேசிய பிரச்சினைக்கு நிலையான தீர்வு உள்ளிட்ட புதிய அரசியலமைப்பை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கொண்டுவரும் என அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் குறிப்பிடுகின்றார்.

தேசிய பிரச்சனை தொடர்பான விடயம் தொடர்பில் அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடப்பட்டு , அது பகிரங்கப்படுத்தப்படும் எனவும் இதுவரையில் அது தொடர்பான கலந்துரையாடல்கள் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் தற்போதுள்ள அரசியலமைப்பு காலாவதியானது எனவும், நாட்டுக்கு ஏற்ற வகையில் தேசிய மக்கள் சக்திகளின் அரசாங்கத்தினால் புதிய அரசியலமைப்பு தயாரிக்கப்படும் எனவும் அவர் கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.

இதேவேளை, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர திஸாநாயக்கவுக்கும் தமிழ் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் இடையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற கலந்துரையாடலில், தேசிய பிரச்சினை மற்றும் ஏனைய பிரச்சினைகளுக்கு நிலையான தீர்வை ஏற்படுத்த அனைத்து தரப்பினருடனும் கலந்துரையாடி இணக்கப்பாட்டுக்கு வரவுள்ளதாக தெரிவித்தார்.

Leave A Reply

Your email address will not be published.