30 மாடிக் கட்டடத்தில் ஏறிய ஆடவர், தீயணைப்புப் படை காப்பாற்றியது (Video).
அர்ஜென்டினா தலைநகர் போனஸ் அயர்ஸில் (Buenos Aires) 30 மாடிக் கட்டடத்தைக் கயிறு ஏதுமில்லாமல் ஏற முயன்ற ஆடவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
போலந்தைச் சேர்ந்த மார்சின் பனோட் (Marcin Banot) Globant கட்டடத்தின் 25 மாடிகளை ஏறிவிட்டார்.
அவரது சாகசத்தைக் காண்பதற்குக் கீழே மக்கள் திரண்டனர்.
மக்களில் ஒருவர் காவல்துறையை அழைத்தார்.
அதிகாரிகள் மார்சின் பனோட்டைக் கைது செய்தனர்.
சம்பவ இடத்திற்குத் தீயணைப்பு வீரர்கள் 30 பேர், அவசர மருத்துவ உதவி வாகனங்கள், காவல்துறை கார்கள் ஆகியவை விரைந்தன.
36 வயது மார்சின் பனோட் அது போன்ற சாகசங்களை மற்ற நாடுகளிலும் செய்திருக்கிறார்.
அவர் அதே Globant கட்டடத்தைச் சென்ற வாரமும் ஏற முயன்றார்.
அப்போது அவர் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டார்.
இந்த முறையும் சிக்கிக் கொண்டார்.
அவரை மீட்பதற்கு 30க்கும் அதிகமான தீயணைப்பு வீரர்கள், மருத்துவ வாகனங்கள், காவல்துறை வாகனங்கள் என்று பெரிய செலவு.
அந்தச் செலவுக்கான பணத்தை அவர்தான் கொடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகின்றனர்.