போர்ப் பகுதிகளில் பிள்ளைகளுக்கு எதிரான விதிமீறல்கள் அதிகம்.

ஐக்கிய நாட்டு நிறுவனம் பிள்ளைகளுக்கு எதிராக அதிக அளவிலான விதிமீறல்கள் நடப்பதாக அறிக்கை வெளியிடவிருக்கிறது.

காஸா, மேற்குக் கரை, இஸ்ரேல் ஆகிய பகுதிகளில் அதுபோன்ற விதிமீறல்கள் இதுவரை இல்லாத உச்சத்தை எட்டியிருப்பதாகக் கூறப்பட்டிருக்கிறது.

அறிக்கையைப் பார்த்திருக்கும் வெவ்வேறு செய்தி நிறுவனங்கள் அந்தத் தகவலை வெளியிட்டன.

பிள்ளைகளுக்கு எதிராக நடந்த ஆயிரக்கணக்கான கடும் விதிமீறல்கள் அறிக்கையில் பட்டியலிடப்பட்டதாகக் கூறப்பட்டது.

வருடாந்திர அறிக்கை பிள்ளைகள் மீதும் சண்டைகள் மீதும் கவனம் செலுத்துகிறது.

உலகின் எந்த ஒரு பகுதியைவிடவும் இஸ்ரேலிலும் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதிகளிலும் விதிமீறல்கள் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

காங்கோ குடியரசு, மியன்மார் , சோமாலியா, நைஜீரியா, சுடான் உள்ளிட்ட நாடுகள் அதில் அடங்கும்.

ஐக்கிய நாட்டு நிறுவனத் தலைமைச் செயலாளர் ஆன்ட்டோனியோ குட்டரெஸ் அறிக்கையை நிறுவனத்தின் பொதுச் சபையில் இந்த வாரம் வெளியிடவிருக்கிறார்.

சென்ற ஆண்டு நடந்த 30,000க்கும் அதிகமான விதிமீறல்களை அறிக்கை உறுதிசெய்திருப்பதாகத் தெரிவிக்கப்பட்டது.

அதற்கு முந்தைய ஆண்டைவிட அது 21 விழுக்காடு அதிகம்.

மனிதாபிமான உதவி கிடைப்பதைத் தடுப்பது, ஆள்கடத்தல் உள்ளிட்டவை அந்த விதிமீறல்களில் அடங்கும்.

Leave A Reply

Your email address will not be published.