குவைத் கட்டடத்தில் தீ – 41 ஊழியர்கள் மரணம்.

குவைத்தில் உள்ள கட்டடம் ஒன்றில் தீப்பற்றியதில்
41 ஊழியர்கள் மாண்டனர்.
சம்பவம் (12 ஜூன்) இன்று நடந்ததாகக் குவைத்தின் துணைப்பிரதமர் கூறினார்.
சொத்துச் சந்தை உரிமையாளர்கள் பேராசையின் காரணமாக விதிகளை மீறியதால் தீச்சம்பவம் நேர்ந்ததாக அவர் தெரிவித்தார்.
சம்பவம் குறித்துக் குவைத் நேரப்படி காலை 6 மணிக்குத் தகவல் கிடைத்தது என்று அதிகாரிகள் கூறினர்.
தீ மூண்ட கட்டடத்தில் பல ஊழியர்கள் தங்கியிருந்தனர்.
அங்கு அளவுக்கு அதிகமான ஊழியர்கள் தங்குவது
குறித்து ஏற்கெனவே எச்சரிக்கை விடுக்கப்பட்டதாகக் காவல்துறை சொன்னது.
தீ மூண்ட காரணத்தை ஆராய விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.