இந்தியத் தூதுவர் – சுமந்திரன் எம்.பி. கொழும்பில் சந்திப்பு! – பல விடயங்கள் தொடர்பில் கலந்தாய்வு.

இலங்கைக்கான இந்தியத் தூதுவர் சந்தோஷ் ஜாவுக்கும், இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனுக்கும் இடையில் கொழும்பில் நேற்று (12) சந்திப்பு நடைபெற்றது.
இதன்போது தற்போதைய அரசியல் சூழ்நிலை மற்றும் வடக்கு, கிழக்கின் அபிவிருத்தி உட்பட்ட இரு தரப்பு இணைப்பு சம்பந்தமான பல தரப்பட்ட விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.