சூடுபிடிக்கும் அரசியல் களம்! – தமிழரசுக் கட்சிக்கு ஐ.தே.கவும் வலை.

ஜனாதிபதித் தேர்தல் தொடர்பில் இலங்கைத் தமிழரசுக் கட்சியுடன் ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி என்பன பேச்சு நடத்தியுள்ள நிலையில், விரைவில் அக்கட்சியுடன் ஐக்கிய தேசியக் கட்சியும் பேச்சு நடத்தவுள்ளது.
ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவுக்கு சிறுபான்மையினக் கட்சிகளின் ஆதரவை திரட்டும் பொறுப்பு அக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, வஜிர அபேவர்தன உள்ளிட்டவர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
எனவே, அவர்கள் தலைமையிலான குழுவொன்றே விரைவில் தமிழரசுக் கட்சியுடன் பேச்சு நடத்துவார்கள் எனத் தெரியவருகின்றது.
ஜனாதிபதித் தேர்தலில் களமிறங்கும் முடிவை எடுத்துள்ள ரணில் விக்கிரமசிங்க, அபிவிருத்திப் பணிகளுக்குத் தடங்கல் ஏற்படாமல் இருப்பதற்காக அது தொடர்பில் பகிரங்கமாக அறிவிக்காமல் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.