இலங்கை வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைகிறது..- IMF

இலங்கை அரசாங்கத்தினால் கடைப்பிடிக்கப்பட்டு வந்த வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் நாளையுடன் முடிவடைவதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் கூற்றுப்படி, வர்த்தக வாகனங்களின் சாதாரண இறக்குமதியைத் தொடங்கவும் இறக்குமதி கட்டுப்பாடுகளை நீக்கவும் இலங்கை திட்டமிட்டுள்ளது, இதனால் அனைத்து வாகன இறக்குமதி கட்டுப்பாடுகளும் 2025 இல் முடிவடையும்.

இலங்கைக்காக நியமிக்கப்பட்ட நிதியத்தின் தலைவர் பீட்டர் ப்ரூவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு செயற்பாடுகளை தொடர்வதற்கு போதிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இலங்கையின் பொருளாதாரம் இன்னமும் ஆபத்தான நிலையில் உள்ளதால் பொருளாதார சீர்திருத்தங்களின் வேகம் தொடர்ந்தும் பேணப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் தேர்தலை நடத்துவதில் IMFக்கு பிரச்சினை இல்லையென்றாலும் , அது தேர்தல் நிதி நிதித்திட்டத்தின் காலத்தை பாதிக்கிறது எனவும் தேர்தல் நடத்துவதாகஇருந்தால் அதிகாரிகளுடன் கலந்துரையாடி நிரலுடன் தொடர்புடைய சட்டகம் ஒன்றுக்குள் காலத்தை தயார் செய்ய வேண்டும் எனவும் தெரிவித்தார். .

Leave A Reply

Your email address will not be published.