நீர்கொழும்பில் தமிழ் மாணவர்கள் இருவர் கடலில் மூழ்கி மரணம்!

நீர்கொழும்பில் கடலில் நீராடச் சென்ற இரண்டு பாடசாலை மாணவர்கள் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளனர்.
நீர்கொழும்பு பகுதியில் உள்ள தமிழ் பாடசாலையொன்றில் தரம் 11 இல் கல்வி பயிலும் இரண்டு மாணவர்களே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.
6 மாணவர்கள் நேற்று (14) கடலுக்குச் சென்றிருந்த நிலையில், அவர்களில் இருவரே உயிரிழந்துள்ளனர்.
சடலங்கள் நீர்கொழும்பு வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.