விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பிக்பாஸ் ஜனனி.

தளபதி விஜயின் நடிப்பில் வெளியாகி வெற்றிப்பெற்ற லியோ திரைப்படத்தில் பிக்பாஸ் ஜனனி நடித்திருந்தார். இத்திரைப்படத்தில் அவரது நடிப்பு பலராலும் பாரட்டப்பட்டிருந்தது.
இந்த நிலையில் லியோவில் இயக்குனர் மிஷ்கினும் நடித்திருந்தார். அந்த திரைப்படத்திற்கு பிறகு அவர் நடிகர் விஜய் சேதுபதியை வைத்து தயாரிக்கும் புதிய திரைப்படத்தில் முக்கிய ரோலில் ஜனனி நடிக்க இருக்கிறார்.
இயக்குனர் மிஷ்கின் மற்றும் ஜனனி இருவரும் லியோ படத்தில் நடித்திருந்தார்கள். அதில் ஜனனியின் நடிப்பை மிஷ்கின் வெளிப்படையாக பாராட்டி இருந்தார். இதுவும் ஜனனிக்கு வாய்ப்பு கொடுத்ததற்கு ஒரு காரணமாக இருக்கலாம் என பல்வேறு தரப்புகளிலும் கருத்துக்கள் பகிரப்பட்டு வருகின்றன.
நடிகர் விஜய் சேதுபதியுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்ததை மகிழ்ச்சியுடன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்துள்ளார் நடிகை ஜனனி.