மலேசியாவின் Genting Highlandsஸில் தீ (Video)

மலேசியாவில் பிரபலச் சுற்றுலாத் தலங்களில் ஒன்றான கெந்திங் ஹைலண்ட்ஸில் தீச்சம்பவம் நேர்ந்துள்ளது.

Genting Skyworld outdoor theme park எனும் வெளிப்புற விளையாட்டுப் பூங்காவில் உள்ள கட்டடத்தில் தீ மூண்டது.

The Star இணையத்தளம் இந்தச் செய்தியை வெளியிட்டுள்ளது.

மாலை 4.55 மணியளவில் கட்டடத்தின் 2ஆவது மாடியில் தீ ஏற்பட்டது. அது பின்னர் 4ஆம் மாடி வரை பரவியது.

21 வீரர்கள் அடங்கிய தீயணைப்புப் படை சம்பவ இடத்துக்கு வரவழைக்கப்பட்டதாகப் பகாங் மாநிலத் தீயணைப்பு, மீட்புத்துறைப் பேச்சாளர் தெரிவித்தார்.

தீப்பற்றிய கட்டடம் கம்பிவடவண்டிகளின் கம்பிக்கு அருகில் இருக்கிறது.

கட்டடத்திலிருந்து கரும்புகை வெளியேறும் படங்களும் காணொளிகளும் சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்படுகின்றன.

Leave A Reply

Your email address will not be published.