யாழில் உருக்குலைந்த நிலையில் கரையொதுங்கிய ஆணின் சடலம்.
யாழ்ப்பாணம், ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மடத்துவெளி கடற்கரை பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மாலை கரையொதுங்கியுள்ளது
ஊர்காவற்றுறை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட பின்னர் சடலம் பிரதே பரிசோதனைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
சடலம் உருக்குலைந்த நிலையில் காணப்படுகின்றது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்றுறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.