யூரோ 2024 கால்பந்து போட்டி : ஸ்காட்லந்தைத் தோற்கடித்து ஜெர்மனி வரலாற்று சாதனை
UEFA யூரோ 2024 காற்பந்துப் போட்டி விறுவிறுப்பாக நடைபெறுகிறது.
தொடக்க ஆட்டத்திலேயே வரலாறு படைக்கப்பட்டது.
ஸ்காட்லந்துடன் நடந்த ஆட்டத்தில் 5 – 1 என்ற கோல் கணக்கில் ஜெர்மனி வெற்றிகண்டது.
முதல் ஆட்டத்தில் இவ்வளவு பெரிய கோல் வித்தியாசம் ஏற்பட்டிருப்பது இதுவே முதல் முறை.
ஆட்டம் ஆரம்பித்த 10ஆவது நிமிடத்திலேயே போட்டிகளை ஏற்று நடத்தும் ஜெர்மனி முதல் கோலைப் போட்டது.
19ஆவது நிமிடத்தில் ஜெர்மனி அடுத்த கோலை அடித்தது.
முதல் பாதி முடியும் வேளையில் ஸ்காட்லந்தின் ராயன் போர்ட்டியஸூக்குச் (Ryan Porteous) சிவப்பு அட்டை கிடைத்தது.
அதன் பின்னர் ஜெர்மனி மூன்றாவது கோலைப்
போட்டது.
இரண்டாம் பாதியில் ஸ்காட்லந்து ஒரு கோலைப் புகுத்தியது.
ஆனால் அது போதவில்லை.
ஜெர்மனி மேலும் 2 கோல்களை அடித்து வெற்றியை உறுதிசெய்தது.
ஜெர்மனி இனி ஹங்கேரியைச் சந்திக்கும்.
ஸ்காட்லந்து சுவிட்சர்லந்துடன் மோதும்.
அதற்கு முன்னதாக இன்றிரவு 9 மணிக்கு ஹங்கேரியும் சுவிட்சர்லந்தும் மோதவுள்ளன.
LIVE From SRF1
https://youtu.be/Nw6aSlRKgyg