காஸாவுக்கு உதவுவதைத் தடுக்க முயன்ற இஸ்ரேலியத் தீவிரவாதக் குழு மீது தடை
காஸாவில் மனிதாபிமான உதவிகள் சென்றுசேர்வதைத் தடுக்க முயன்ற இஸ்ரேலியத் தீவிரவாதக் குழு மீது அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது.
Tzav 9 என்ற அக்குழு உதவி வாகனங்களைப் பலமுறை தாக்கியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.
தீவிரவாதக் குழு உறுப்பினர்கள் சாலைகளை முற்றுகையிட்டுக் கொள்ளையடித்தல், வாகனங்களை எரித்தல் போன்ற வன்செயல்களில் ஈடுபட்டனர்.
கடந்த பிப்ரவரியில் அமெரிக்க அதிபர் ஜோ பைடன், மேற்குக் கரையில் அமைதியையும் நிலைத்தன்மையையும் அச்சுறுத்தும் இஸ்ரேலியத் தீவிரவாதக் குழுக்களின் வருவாயை முடக்கும் நிர்வாக ஆணையில் கையெழுத்திட்டார்.
இந்நடவடிக்கை மூலம் அமெரிக்க எல்லைக்கு உட்பட்ட பகுதிகளிலுள்ள Tsav 9 தீவிரவாதக் குழுவின் சொத்துகள் முடக்கப்படும்.
காஸாவிற்குள் உதவிகள் சென்றுசேர்வதைத் தடுப்பதன் மூலம் அங்குள்ள இஸ்ரேலியப் பிணைக்கைதிகளை விடுவிக்க முயன்று வருவதாகக் குழு சொன்னது.