40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கட்சி தாவ தயார்..
ஏறக்குறைய 40 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் நிலைப்பாட்டை மாற்றத் தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
அரசாங்கத்தையும் எதிர்க்கட்சியையும் பிரதிநிதித்துவப்படுத்தும் இந்த பாராளுமன்ற உறுப்பினர்களில் பிரதான கட்சிகளில் பதவி வகிக்கும் சுமார் 15 பேர் உள்ளதாக கூறப்படுகிறது.
எதிர்க்கட்சியைச் சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவொன்று ஜனாதிபதிக்கு ஆதரவளிக்க தயாராக உள்ள அதேவேளை, அரசாங்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் மற்றுமொரு பாராளுமன்ற உறுப்பினர்களும் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவளிக்க தயாராக உள்ளனர்.
மேலும் பல எம்.பி.க்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளிக்க தயாராகி வருகின்றனர்.
இக்குழுவினர் இது தொடர்பில் ஏற்கனவே ஆலோசித்து வருவதாகவும் தேர்தல் திகதி வெளியான பின்னர் உரிய நடவடிக்கைகள் அறிவிக்கப்படும் எனவும் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.